யாரிஸ் விற்பனையாகும் என்று டொயோட்டா நம்புவத

டொயோட்டாவின் யாரிஸ் செடான் கார் வெளியாகிவிட்டது. மிட் சைஸ் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் 2-ம் தலைமுறை கார்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் டொயோட்டாவின் இந்த தாமதமான என்ட்ரி யாரிஸ்க்கு பின்னடைவை தான் தருகிறது. பவர் சீட், ரூஃபில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்டுகள், முன் பக்க பார்க்கிங் சென்ஸார், adjustable neck restraints, பேடல் ஷிஃப்ட், கை அசைவுகளில் கன்ட்ரோல் செய்யக்கூடிய இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் என செக்மென்ட்டில் சில வசதிகளையும், டீசல் என்ஜின் இல்லை என்ற பெரும் குறையையும் தாண்டி இந்த கார் விற்பனையாக காரணம் உள்ளது. அதுதான் பாதுகாப்பு.

 

டொயோட்டா யாரிஸ்டொயோட்டா யாரிஸ் காரில் ABS, EBD, 7 காற்றுப் பைகள் என முக்கிய தேவையான பாதுகாப்பு அம்சங்கள் விலை குறைவான பேஸ் வேரியன்டிலேயே வந்து விடுகிறது. சிட்டி, வெர்னா, சியாஸ் போன்ற போட்டியாளர்களிடம் விலை குறைவான வேரியன்டில் 2 காற்று பைகள்தான் வருகின்றன. காற்று பைகள் மட்டுமல்ல, V மற்றும் VX வேரியன்டுகளில் முன் பக்க பார்க்கிங் சென்ஸார் மற்றும் எல்லா வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ் வருகின்றன. விலை அதிகமான டாப் வேரியன்டில் ESP, ட்ராக்ஷன் கன்ட்ரோல், tyre pressure warning system போன்றவை வந்துவிடுகிறது. இந்த பாதுகாப்பை பரிசோதித்து, ஆசியாவில் தயாராகும் கார்களுக்கான ASEAN NCAP கிராஷ் டெஸ்டில், 5 ஸ்டார் வாங்கியுள்ளது யாரிஸ். 
 

டொயோட்டா யாரிஸ்


போட்டியாளர்களுக்கு மத்தியில் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொடுத்து பாதுகாப்பான கார் என்று தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது டொயோட்டா. மேலும், தொடர்ச்சியாக வரப்போகும் கார்களிலும், ஏற்கனவே உள்ள கரோலா, எட்டியோஸ், இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களிலும் விரைவில் இந்த பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்ட் ஆகா மாற்றப்போகிறார்கள்.