மார்க்கெட்ட தலைகீழா புரட்டி போட வரும் விலை குறைவான 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்! இன்னும் ரெண்டே வாரத்தில் லான்ச்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV). வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த எலெக்ட்ரிக் காரின் டீசர் வீடியோவை (Teaser Video) கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளன. இதில், மிகவும் முக்கியமான தகவல் என்னவென்றால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 490 கிலோ மீட்டர்கள் என்பதுதான். எந்த காரை வாங்குவது, எந்த காரை விடுறதுனே தெரியல!! இந்த ஜூலையில் தரமான சம்பவம் காத்துக்கிட்டு இருக்கு! ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 51.4 kWh பேட்டரி ஆப்ஷன்தான், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரில் இந்த பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 473 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் இதன் டிரைவிங் ரேஞ்ச் 490 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 17 கிலோ மீட்டர்கள் அதிகம். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 3 வரிசை இருக்கை அமைப்பு வழங்கப்படவுள்ளது. காரை விட டிராக்டர் தான் அதிகமா வித்திருக்குது! இந்த கம்பெனி பெயரை கேட்டாலே சும்மா அதிருதே! அதாவது இது 7 சீட்டர் கார் ஆகும். ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக், 5 சீட்டர் கார் மட்டுமே. அப்படி இருக்கும்போது, கியா நிறுவனம் கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ஜை எப்படி 17 கிலோ மீட்டர்கள் அதிகப்படுத்தியது? என்பதை காண ஆர்வமாக உள்ளது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், இதுதவிர இன்னொரு பேட்டரி ஆப்ஷனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் 42 kWh பேட்டரிதான். கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட்களில் இந்த பேட்டரி ஆப்ஷனை எதிர்பார்க்கலாம். மொபைல் போன் கம்பெனி கார் மார்க்கெட்டில் இறங்கினால் இதுதான் நடக்கும்! வருஷத்துக்கு ஒரு காரை கொண்டு வந்துருது!! இதன் டிரைவிங் ரேஞ்ச் 390 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 6 சீட்டர் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 6 சீட்டர் மாடலின் நடு வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டீசர் வீடியோ மூலம் நமக்கு இன்னும் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதன்படி கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ட்யூயல் டிஜிட்டல் திரைகள் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லெவல் 2 அடாஸ் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார், வரும் ஜூலை 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 16 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.